• Breaking News

    நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை

     

    நடிகர், பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் கடந்த 2018ம் ஆண்டில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சை ஏற்படும் விதமான கருத்து ஒன்றைத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது கடும் ஆட்சேபத்தை ஏற்படுத்திய நிலையில், எஸ்.வி. சேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் கொடுத்தது.

    பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில், எஸ்.வி.சேகருக்கு 1 மாதம் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. இந்த அபராதத் தொகை 15 ஆயிரம் ரூபாயை நடிகர் எஸ்.வி. சேகர் செலுத்தியுள்ளார். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஏதுவாக தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments