இன்றைய ராசிபலன் 06-08-2024
மேஷம் ராசிபலன்
சில சிக்கல்களை உருவாக்குபவர்கள் உங்களுக்கு கடினமான நேரத்தை தருவதையே அவர்களின் தனிப்பட்ட இலக்காகக் கொண்டுள்ளனர். நீங்கள் ஒரு பெரியதாக ஒன்றும் செய்துவிடவில்லை. ஆனாலும், நீங்கள் இப்போது உங்களது பொறுமையினை இழக்க ஆரம்பித்துவிட்டீர்கள். அங்கேயே நிலைத்திருங்கள். ஏனென்றால், அங்கிருந்தே விஷயங்கள் சிறப்பாக மாறும். நீங்கள் நினைப்பதை விட, நிச்சயமாக உங்களது விடாமுயற்சி விரைவில் பலனளிக்கும். இன்று, எந்தவிதமான மோதலுக்கும் இடமில்லை. அமைதியை ஏற்படுத்தி, நல்லிணக்கத்தை வளர்க்கும் விஷயங்களைச் செய்யுங்கள். உங்கள் சொந்த நலனுக்காக புறங்கூறுபவர்களையும், அவர்களின் விமர்சனங்களையும் புறக்கணியுங்கள்.
ரிஷபம் ராசிபலன்
இந்த வாரம் உங்கள் தொழிலில் கவனம் செலுத்தக் கடுமையாக உழைத்து வருகிறீர்கள். ஆனால் அது வீணாகி விட்டதாகத் தெரிகிறது. இந்த போட்டியில் நீங்கள் மட்டுமே இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறீர்கள், உங்களது போட்டியாளர் நீங்கள் காட்டும் அதிகப்படியான கவர்ச்சியால் அச்சமடைந்துள்ளனர். உங்கள் ஆற்றலை ஒரு உச்சநிலைக்குக் கொண்டு செல்ல நீங்கள் விரும்பலாம். இனிமையான சக ஊழியர்களைக் காட்டிலும், உங்களுக்குத் தீமை செய்பவர்களைக் கவனியுங்கள். அவர்கள் உங்களுக்குத் தொல்லை கொடுக்கலாம்.
மிதுனம் ராசிபலன்
கடந்த நிகழ்ந்த விஷயங்கள் சீராக இல்லாமல் இருக்கலாம். உங்களை விடக் கடினமான காலங்களில் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைத்த நல்ல விஷயங்களை எண்ணி நேர்மறையாகச் செயல்படுங்கள். விரைவில் உங்களைக் கஷ்டத்தில் ஆழ்த்தும் விஷயங்கள் மாறும். உங்கள் பலம் மற்றும் உங்கள் சமூக திறன்கள் புதிய வாய்ப்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும். அடுத்த சில நாட்களில் பயணங்கள் மற்றும் புதிய முயற்சிகளுக்கு நிறைய இடம் உள்ளது. உங்களைப் புத்துயிர் பெறச் செய்ய இது ஒரு நல்ல நேரம்.
கடகம் ராசிபலன்
தேவையற்ற கவலைகளிலிருந்து உங்கள் மனதை விடுவித்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றே கவனச்சிதறலை உருவாக்கவும். இந்த நாளில் முன்னோக்கிச் செல்ல தேவையான செயல்களைச் செய்யுங்கள். அற்ப விஷயங்களில் நீங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது. மக்கள் என்ன நினைப்பார்கள் என்பது உங்கள் கவலையாக இருக்கக்கூடாது. உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் விடாமுயற்சியுடன் இருந்தால், சில விரைவான வெகுமதிகள் உங்களைத் தேடி வரும்!
சிம்மம் ராசிபலன்
இன்று, உற்சாகத்தால் உங்களது வாழ்க்கை நிரம்புகிறது. உங்களது நலன் விரும்பிகளை எதிர்பாராத இடங்களில் திடீரென காண்பீர்கள். உங்களது உறவு முறைகளிலும், இதயத்திற்கு நெருக்கமான விஷயங்களிலும், எல்லையற்ற மகிழ்ச்சி இருக்கும். உங்களது உள்ளுணர்வுகளின் தூண்டுதலின் அடிப்படையில், புதிய வாய்ப்புகளைப் பெறும் போது, எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் வேலை மற்றும் பணி தொடர்பான விஷயங்களை நீங்கள் தீர்மானிப்பதற்கு முன்பு, நன்கு சிந்தியுங்கள். கவனமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், உங்களை நீண்ட தூரம் பயணிக்க உதவும்.
கன்னி ராசிபலன்
நீங்கள் வாழ்க்கை திருப்தியாக இல்லை என்று நீங்கள் உணர்கிறீர்களா? இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போன்று இல்லாமல், இப்போது வேலை மாற்றத்திற்கான சரியான நேரம். நீங்கள் செல்லும் பாதை குண்டும் குழியுமாக இருக்கலாம். ஆனால், அந்த மாற்றம் நிச்சயம் வெற்றியைக் கொண்டு வரும். கடந்தகால அன்பு, உங்களைச் சிறப்பாக மாற்ற உள்ளது. அந்த கெட்ட எண்ணங்கள், உங்களைச் சுற்றி, உங்கள் இயல்பான ஆற்றல்மிக்க உந்துதலைக் கெடுத்து விடக்கூடாது. சரியான பாதையில் சவால்களை எதிர் கொள்ளுங்கள். அது வெற்றிகரமாக மாறும்.
துலாம் ராசிபலன்
அன்போடும், சிரிப்போடும், அகமகிழ்வோடும் இருங்கள். ஏனென்றால், இன்று, நட்சத்திரங்கள் உங்களுக்கு எதிர்பாராத ஆச்சரியங்களை அளிக்க இருக்கின்றன. உங்களது பாதையில் சவால்கள் வந்தாலும் கூட, கடினமான சூழ்நிலைகளிலிருந்து நன்மையினைக் காண முடியும். தைரியமான முடிவுகளை எடுப்பதற்காக, உங்களது அன்பிற்குரியவர்கள் உங்களை உற்சாகப்படுத்துவார்கள். உங்கள் பணப்பையினை திறந்து, அதிலுள்ள பணத்தை குறைவான அளவே பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையோடு இருங்கள். இல்லையெனில், நீங்கள் அதை உணரும் முன்பே அது சுருங்கிவிடும்!
விருச்சிகம் ராசிபலன்
உங்களுக்கு ஏற்படும் சந்தேகம் உங்களைப் பாதித்துள்ளதால், நீங்கள் ஆழமற்ற நீரில் மூழ்கியது போன்று உணர்கிறீர்கள். இதிலிருந்து வெளியேறி உங்கள் மனதைச் சரி செய்ய வேண்டிய நேரம் இது. இப்போது உங்களுக்கு முன்னால் உள்ள விருப்பங்கள், அனைத்தும் உங்களுக்கு நன்றாகத் தெரியத் தொடங்கும். நீங்கள் குழந்தையாக இருந்த போது யாரால் உங்களுக்காக முடிவெடுக்க முடியும் என்று நீங்கள் விரும்பினீர்களோ, அதே போன்று செய்வீர்கள். ஒரே நேரத்தில் பல விஷயங்களைக் கையாள வேண்டியிருந்தால், நீங்கள் மெதுவாகச் செயல்படுங்கள். ஒரு நேரத்தில் ஒரு படி எடுத்து செயலாற்றுவதன் மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
தனுசு ராசிபலன்
இது உங்களுக்கான சிறந்த நாள், கண்டிப்பாக உங்களுக்கு சில மறக்க முடியாத நினைவுகளைக் கொடுப்பதுடன், வாழ்நாளில் மறக்க முடியாத புதையலாக இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் மீது கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம். உண்மையில் அன்பும், பாசமும் அவர்களுக்குத் தேவை. இந்த நேரத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அது தேவைப்படும். நல்ல விஷயங்களில் உங்கள் ஆற்றலில் செலுத்துவதில் இன்று கவனம் செலுத்துங்கள். உங்களது உரையாடல் திறமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் குறிப்பிடத்தக்க ஒருவரின் நல்ல புத்தகத்தில் உங்கள் பெயரும் இடம் பெறலாம்.
மகரம் ராசிபலன்
நீங்கள் ஒருதலை காதலில்சிக்கியுள்ளீர்கள்? அது உங்களை அதிகளவில் பாதிக்கிறதா? நீங்கள் மீண்டும்அதிலிருந்துமீள வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் மனதிலேயே கேள்வி கேளுங்கள். அந்த குறிப்பிட்ட நபரை வெற்றி கொள்ள நீங்கள் எந்த அளவுக்கு முயல்வீர்கள்? நீங்கள் உங்கள் செயல்களை இருப்பதை விடஅதிகமாகக்காட்டுவதாகத்தோன்றுகிறது, அது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். எந்த வரம்பையும் மீறாதீர்கள். கூர்மையான முனையின் மீது நடந்து செல்லாதீர்கள். உங்கள் ஒவ்வொரு அடியையும் மெதுவாக எடுத்து வைத்து, உங்கள் செயல்களைக் கண்காணிக்கவும்.
கும்பம் ராசிபலன்
கடந்த காலங்களில் நீங்கள் பிடிவாதமாக இருந்ததால், பல சிக்கலைச் சந்திக்க நேர்ந்தது. நீங்கள் குழப்பத்தில் இருப்பதை விரும்பவில்லை என்றால், எந்த வகையிலும் குழப்பத்தில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருங்கள். ஒருவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டிய பின்னர், அவருடன் மீண்டும் பேசுவதும் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். அவரிடம் மன்னிப்பு கேட்பது உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது, மன்னிப்பு கேட்பதால், நீங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அவருக்குத் தெரியப் படுத்துங்கள். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வழிகாட்டிகள் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வெளிச்சம் காட்டும் விளக்காக இருப்பார்கள். தேவைப்பட்டால் அவர்களிடம் உதவி கேட்கப் பயப்பட வேண்டாம்.
மீனம் ராசிபலன்
உங்கள் மனதுக்கும், உடலுக்கும் பிரத்தியேக கவனம் தேவை. ஆனாலும், உங்கள் நிதி நிலை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் உங்கள் பாக்கெட்டை காலி செய்யும் செலவுகளைச் செய்வதில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உங்களை நேசிப்பவர்கள் இன்று உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள். மேலும், அவர்கள் உங்களை நேசிப்பதையும், அவர்கள் உங்களைப் பாராட்டுவதையும் நீங்கள் உணருவீர்கள். உங்கள் திறமையை அதிகரித்துக் கொள்ளக் கூடிய புத்தகங்களைப் படியுங்கள். ஏனென்றால் உங்களுக்கு மிக விரைவில் உயர் பதவி கிடைக்கலாம். உங்கள் மீது அக்கறை கொண்டு நீங்கள் வாழ்வில் முன்னேற வாழ்த்தும் நபர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். செய்ந்நன்றி மறத்தல் கூடாது.
No comments