இன்றைய ராசிபலன் 13-09-2024
மேஷம் ராசிபலன்
வாழ்க்கையில் உங்களுக்குப் புரியாத சில சம்பவங்கள் உள்ளன. சிலர் உங்களிடம் ஏன் இரக்கமற்ற முறையில் நடந்த கொள்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை. நீங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் செல்ல வேண்டும் அல்லது உங்கள் சொந்த அறிவுத் திறனை அதிகரித்துக் கொள்ள இதைக் கவனிக்க வேண்டும். சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உங்களைச் சுற்றி இருக்கலாம். இது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். இது முதலில் ஒரு சுமையாகத் தோன்றினாலும், நீங்கள் அதை நேசிப்பீர்கள்.
ரிஷபம் ராசிபலன்
சவால்களை ஏற்றுக்கொண்டு, உங்களிடத்திலுள்ள மனோதிடத்தை வரவழையுங்கள். அப்போது, கடினமான பணிகளைச் செய்வதிலிருந்து நீங்கள் விலகமாட்டீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போது, குடும்பத்தினரும், நண்பர்களும் உதவுவார்கள். நீங்கள் உங்களது உள்ளக் கிடக்கைகளை அங்கலாய்கும் போது, அவர்கள் உங்கள் பக்கமாக இருப்பார்கள். ஏதேனும் ஒன்றில் சிக்கிக்கொண்டதாக உணரும் போது, உங்கள் அகம்பாவத்தை விடுத்து, உதவி கேட்க தயாராக இருங்கள்.
மிதுனம் ராசிபலன்
உங்கள் மனதிற்கு பெரும் சக்தி இருக்கிறது! உங்கள் மனநிலையையும் பாதிப்பதில் உங்கள் எண்ணங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறந்த ஒன்றைக் கண்டுபிடிப்பது தொடர்பான உங்களது பெரும்பாலான முயற்சிகள் இன்று வெற்றிகரமாக அமையும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் உள்ளது! ஒரு நண்பர் உங்களிடம் சில ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கேட்பார். இந்த நாளில் அவருக்குத் தயங்காமல் உதவி செய்யுங்கள்.
கடகம் ராசிபலன்
துரதிர்ஷ்டவசமான செயல்கள் உங்கள் பக்கமாக நகரும் என்பதால் ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நேர்மறையாக இருங்கள், முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதற்கேற்ப முடிவு செய்யுங்கள். ஆனால், தேவையற்ற உணர்ச்சிகளை மறைத்து வைத்திருங்கள், ஏனென்றால் நீங்கள் இப்போது செய்யும் எந்தவொரு செயலையும் அவை தடுத்துவிடும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள், அவற்றை நோக்கிச் செயல்படுங்கள். சுயநலக்காரர்களிடம் பேசுவதை விட்டு விடுங்கள். ஏனெனில், அவை எதிர்மறை மற்றும் சோகத்தைத் தவிர வேறொன்றையும் ஏற்படுத்தாது.
சிம்மம் ராசிபலன்
நீங்கள் பொறுமையின்றி இருப்பதாக உணர்கிறீர்களா? நீங்கள் வேகமாக முடிவெடுப்பது,உங்களைப்பாதிக்கலாம். அவசர முடிவுகளின் போது எச்சரிக்கையாக இருங்கள். முடிவு எடுப்பதற்கு முன்பு நீங்கள் நடத்தும் ஒரு சிறிய ஆலோசனை உங்களுக்கு நல்லது செய்யும். இதன் மூலம் நீங்கள் புதிய எண்ணங்களைப் பெறலாம். மேலும், ஊக்கமளிக்கும் நண்பர்கள் சரியானவழியைக்காட்டலாம். நல்ல பலனைப் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் புதுமையான முயற்சிகள், சிறந்த முடிவுகளுக்கு வழிவகுக்கும்.
கன்னி ராசிபலன்
நீங்கள் வழக்கமாகவே, புத்திசாலித்தனமாகவும் தெளிவாகவும் இருப்பீர்கள், ஆனால், இன்று உங்கள் மனதின் செயல்பாடு தடை கொண்டதாகவும், தெளிவற்றதாகவும் தெரிகிறது. மனக்கிளர்ச்சி நிறைந்த பாதையில் விலகி இருங்கள். இல்லையெனில், இது வாழ்க்கையின் நோக்கத்திலிருந்து, உங்களிடமிருந்து தடம் மாறச் செய்துவிடும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் சமூக தொடர்புகள் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் எந்த நிதி முடிவுகளையும் முயற்சிகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது.
துலாம் ராசிபலன்
புதிய வாய்ப்புகள் உங்களை வழிநடத்தும். அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவதன் மூலம், உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க முயற்சி செய்யுங்கள். இது அந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்த உதவும். உங்களுக்கு முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த வழியில் உங்களுக்கே உள்ள ஆற்றலைச் சிறப்பாகப் பயன்படுத்தலாம். புதிய நட்புகள் மற்றும் நண்பர்களை உருவாக்குங்கள். சில விஷயங்களைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தை நீங்கள் அறிந்து கொள்ள, அவர்கள் உங்களுக்கு உதவ முடியும்.
விருச்சிகம் ராசிபலன்
தேவையற்ற கவலைகளிலிருந்து உங்கள் மனதை விடுவித்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றே கவனச்சிதறலை உருவாக்கவும். இந்த நாளில் முன்னோக்கிச் செல்ல தேவையான செயல்களைச் செய்யுங்கள். அற்ப விஷயங்களில் நீங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது. மக்கள் என்ன நினைப்பார்கள் என்பது உங்கள் கவலையாக இருக்கக்கூடாது. உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் விடாமுயற்சியுடன் இருந்தால், சில விரைவான வெகுமதிகள் உங்களைத் தேடி வரும்!
தனுசு ராசிபலன்
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படுகிறீர்கள். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் உங்களுடன் மட்டுமே போட்டியிடுகிறீர்கள். நீண்ட காலத்திற்குப் பின்னர், உங்களுக்கு மிகவும் சிறந்த நபரிடம் இருந்து இதை நீங்கள் கேட்கலாம். அவர்களிடம் பெரிய இடைவெளியைப் பற்றிக் கேள்விப்படுவது, பொறாமையைத் தூண்டக்கூடாது. அவர்களுடன் மகிழ்ச்சியாக இருங்கள், அவர்களுக்கு வாழ்த்து தெரிவியுங்கள். நீங்கள் எங்குத் தொடங்க வேண்டும் என்று நினைத்து, அதற்கான பணிகளைச் செய்யத் தொடங்குங்கள். ஒரு நாளைக்கு, ஒரு செயலை எடுத்து புத்திசாலித்தனமாக வேலை செய்ய உத்வேகம் பெறுங்கள்.
மகரம் ராசிபலன்
வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையானதைப் பற்றி, நீங்கள் எப்போதாவது ஒரு யதார்த்தமான எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கிறீர்களா? அப்படி இல்லையென்றால், அது பற்றி இன்று சிந்திக்க வேண்டிய நேரம் இது. உங்களது பலத்தில் கவனம் செலுத்துங்கள், இன்று உங்கள் எதிர்பார்ப்புகளைப் பற்றித் தெளிவாகச் சிந்தியுங்கள். உங்கள் உறவுகளில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் உள்ளது. நீங்கள் சிறிய விஷயங்களை ஆழமாகத் தோண்டி பார்ப்பதை நிறுத்தி, விட்டுவிட வேண்டும். இன்று உங்கள் வாழ்க்கை போட்டி நிறைந்ததாக உள்ளது. வாழ்க்கையில் போட்டிக்கும், உறவுக்கும் இடையிலான நுட்பமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள்.
கும்பம் ராசிபலன்
நீங்கள் செய்துமுடிக்க வேண்டிய பட்டியலில், நிறைய திட்டங்கள் மற்றும் கருத்துருக்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே நேரத்தில் நீங்கள் குழப்பமாகவும், உற்சாகமாகவும் உணர்கிறீர்கள். மனஅழுத்தம் மற்றும் பயம் போன்றவை உங்களுக்கு பிரச்சினைகளை உருவாக்க விடாமல் முயலுங்கள். நீங்கள் ஒரு சிறிய விஷயத்தை செய்தாலும் கூட, நன்றாகச் செய்யுங்கள். இது உங்கள் கவலை மற்றும் மனஅழுத்தத்தை கடந்து செல்ல உதவும். நீங்கள் பங்கேற்க தகுதியற்றவர்களாக இருக்கும் வாய்ப்புகளில், நிபுணர்களின் உதவியைத் கேட்கத் தயங்க வேண்டாம்.
மீனம் ராசிபலன்
வாழ்க்கை சில நேரங்களில் உங்களுக்கு ஒரு இழுபறியாகத் தோன்றுகிறது. எனவே, உங்களுக்கு ஒரு மாற்றம் தேவை. இந்த வழியில், உங்கள் உள்மனத்தில் தோன்றும்விஷயங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தலாம். உங்கள் வாழ்க்கையில் முக்கிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க முயற்சி செய்யுங்கள். இது முக்கிய விஷயங்களைவிரைவாகச்செய்ய உதவும். புதிய யோசனைகள் உங்கள் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடலாம். மேலும், அவற்றைச் சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள உங்கள் மனதைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
No comments