விஜயின் கடைசி பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது - MAKKAL NERAM

Breaking

Sunday, January 26, 2025

விஜயின் கடைசி பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தின் தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ, பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜனநாயகன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது நடிகர் விஜயின் கடைசி படம் ஆகும். இந்நிலையில் படத்தின் தலைப்பை பார்த்தாலே அரசியல் கதை என்று தோன்றுகிறது. தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய விஜய் ஜனநாயகன் படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்குகிறார். இதன் காரணமாக அரசியல் பின்னணியில் படம் இருக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் தற்போது படத்தின் தலைப்பு அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. அதன்படி ஜனநாயகன் படம் அரசியல் பின்னணியில் உருவாகும் படமாக இருக்கலாம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது மிகவும் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment