மேஷம் ராசிபலன்
வாழ்க்கை சில நேரங்களில் உங்களுக்கு ஒரு இழுபறியாகத் தோன்றுகிறது. எனவே, உங்களுக்கு ஒரு மாற்றம் தேவை. இந்த வழியில், உங்கள் உள்மனத்தில் தோன்றும்விஷயங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தலாம். உங்கள் வாழ்க்கையில் முக்கிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க முயற்சி செய்யுங்கள். இது முக்கிய விஷயங்களைவிரைவாகச்செய்ய உதவும். புதிய யோசனைகள் உங்கள் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடலாம். மேலும், அவற்றைச் சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள உங்கள் மனதைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
ரிஷபம் ராசிபலன்
மந்தமான தன்மை உங்களை ஆட்கொண்டுள்ளது. அது உங்கள் செயல்களைப் பாதிக்கும். இடைவிடாமல் வேலை செய்வது உங்களைச் சோர்வடையச் செய்துள்ளது. கற்பனைத் துறையில் இருப்பவர்கள், தங்கள் எண்ணங்களின் பெரும் சுணக்கம் இருப்பதைப் போலவும், மந்தமானதாகவும் உணரலாம். உங்கள் அனுபவத்தை மீண்டும் அடைய உங்களுக்கு என்ன தேவை. இதற்காக உற்சாகமூட்டும் ஒன்றைச் செய்யுங்கள் அல்லது உங்கள் கற்பனைகளில் ஆழ்ந்து யோசியுங்கள். இது உங்களுக்கு இப்போது அவசியம் தேவை. இதன் மூலம் நீங்கள் அதிக பயன் பெறுவீர்கள்.
மிதுனம் ராசிபலன்
எவர் ஒருவர் உங்களது ஆலோசனைகளையும், உதவியையும் எதிர் நோக்குகிறாரோ, அவருடன் கரம்கோர்த்து உதவுங்கள். இன்று உங்களது அன்பை அவர்களுக்கு கொஞ்சம் காட்டுங்கள். ஓய்வெடுக்கவும், ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நேரத்தை உபயோகித்துக் கொள்ளுங்கள். நீங்கள் திட்டங்களை சிறந்த முறையில் உருவாக்க ஒரு அசாத்தியமான தேவை உள்ளது. ஒரு நாள் மட்டும் அதற்காக ஒதுக்கி வையுங்கள். உங்களது தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளையும், அது சார்ந்த தொழில் நுட்பங்களையும் விட்டுவிட்டு, அமைதியிலும், தியானத்திலும் லயித்து இருப்பதன் மூலம், அழகை அனுபவியுங்கள். சாதாரணமாக இருங்கள். மேலும், உங்களைச் சுற்றிலும் அமைதியைக் காணுங்கள்.
கடகம் ராசிபலன்
நீங்கள் ஏன் சோம்பேறிகளாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வி சில காலமாக உங்கள் மனதை ஆக்கிரமித்துள்ளது. அதை நீங்கள் அகற்ற வேண்டும். இந்த எண்ணத்தால் உங்கள் மனம் பாதித்து இருந்தாலும், அதை உயர்த்துவதற்கான நேரம் இது. நீங்கள் எல்லாவற்றிலிருந்தும் தப்பிக்க விரும்புகிறீர்கள். ஒருவேளை நீங்கள் இவ்வளவு காலமாகத் திட்டமிட்டிருந்த பயணத்திற்கான நேரம் இது. அந்த அழுத்தங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் படைப்புத் திறன்களை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்!
சிம்மம் ராசிபலன்
சமீபத்தில் ஏதேனும் சிந்தனைகள் உங்கள் மனதில் காலதாமதமாக தோன்றுகிறதா? புதிதாக ஏதாவது ஒன்றை புதியதாக செய்ய வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்கு மேலோங்குகிறதா? இப்போது இதைத் தொடங்க சிறந்த நேரமாக இருக்கும். மேலும், அவைகள் சரியான நிலையில் கனகச்சிதமாக பொருந்துவதாகத் தோன்றும். புதிய தொடர்புகள் அமைய வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் உங்களிடம் தான் உள்ளது. பிரபஞ்சத்தால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும்.
கன்னி ராசிபலன்
அளவிற்கு மிஞ்சிய தேவையற்ற செலவுகள் அல்லது ஆடம்பரத்தால் மட்டுமே மக்களை ஈர்க்க முடியாது. இவை அதிக காலம் நீடிக்காது. மாறாக, அவைகளின் தேவைகளுக்க்காக நீங்கள் முனைந்திருக்கும் வரை மட்டுமே இது நீடிக்கும். உங்களது செலவில் தான் அனைத்து விஷயங்களும் பிரகாசமாகத் தெரிகின்றன. கடந்த சில நாட்களாக, நீங்கள் உருவாக்கிக் கொண்ட ஆடம்பரமான பிம்பத்திற்கு இது உத்தரவாதம் அளிக்காது. எனவே, அதனைக் குறைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் தொழில் அல்லது கல்வி போன்றவற்றில் கவனம் செலுத்துவதற்காக, உங்களுக்கு பிடித்ததும், இன்பத்தை அளிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும், பொழுதுபோக்கு அம்சங்ககளையும் கூட விட்டுவிடுங்கள். எந்த விளையாட்டிலும் ஈடுபடாமல், எப்போதுமே வேலை செய்து கொண்டிருப்பது உங்கள் உடல்நலத்தை கடுமையாக பாதிக்கும். எனவே, அது உங்களை பாதிக்கும் முன்பு, ஏதாவது செய்ய முயலுங்கள்.
துலாம் ராசிபலன்
துரதிர்ஷ்டவசமான செயல்கள் உங்கள் பக்கமாக நகரும் என்பதால் ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நேர்மறையாக இருங்கள், முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதற்கேற்ப முடிவு செய்யுங்கள். ஆனால், தேவையற்ற உணர்ச்சிகளை மறைத்து வைத்திருங்கள், ஏனென்றால் நீங்கள் இப்போது செய்யும் எந்தவொரு செயலையும் அவை தடுத்துவிடும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள், அவற்றை நோக்கிச் செயல்படுங்கள். சுயநலக்காரர்களிடம் பேசுவதை விட்டு விடுங்கள். ஏனெனில், அவை எதிர்மறை மற்றும் சோகத்தைத் தவிர வேறொன்றையும் ஏற்படுத்தாது.
விருச்சிகம் ராசிபலன்
சில உறவுகளை சிறந்தவையாக மாற்ற அதிக சிரத்தை தேவைப்படுகிறது. அதை முதலில் நினைவிற் கொள்ளுங்கள்! உங்கள் வாழ்க்கையில் நடந்த வேதனையான விஷயங்களை மறக்க விரும்புகிறீர்களா? நீங்கள் அதை ஏன் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. நண்பா! நீ ஒரு உண்மையான போர்வீரன். அனைத்தும் விரைவில் சிறப்பாக அமையும். சற்று பொறுத்திரு. பல விஷயங்கள் உங்கள் நம்பிக்கையை குறைத்து, ஓர் பாதுகாப்பற்ற தன்மையை உங்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளன. உங்களை நீங்களே நம்பிய அந்த நிலைக்கு இப்போது என்னவாயிற்று? இதற்குரிய பதில் உங்களிடம் தான் உள்ளது. இன்றே நீங்கள் அதைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
தனுசு ராசிபலன்
இது ஒரு அற்புதமான பயணத்திற்கான நேரம், எனவே அந்த பயணத்திற்குக் கொண்டு செல்லும் பையை வெளியே எடுங்கள். இதை சிறியதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பயணமானது எந்த ஒரு தொழிநுட்ப கருவிகளும் இல்லாத பயணமாக இருக்கட்டும்! இது நிச்சயமாக உங்களுக்கு வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கும். மேலும், இது உங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். உங்களது நீண்ட கால எதிரி உங்கள் உதவியை நாடுவார், அவருக்கு நீங்கள் உதவ வேண்டும். நீங்கள் செய்யும் உதவிகள் குறுகிய காலத்தில் உங்களுக்கு வெகுமதியைப் பெற்றுத் தரும்.
மகரம் ராசிபலன்
நண்பர்களுடன் வாழ்க்கையை அனுபவியுங்கள். இன்று, உங்களை சற்று தளர்த்திக் கொள்ளுங்கள். அது உங்கள் மனதை அமைதியாக வைக்க உதவும். உங்களிடம் உள்ள கடன் அட்டைகள் மூலம் துணிச்சலாகப் பொருட்களை வாங்கிக் கொள்வது எளிதாகிவிட்டது. ஆனால், இவ்வாறு பொருட்களை வாங்குவது, உங்கள் வரவு செலவைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கடன் அட்டை அறிக்கை, உங்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்துவதற்கு முன்பு அதில் உள்ள தவறுகளைச் சரி செய்து கொள்ளுங்கள். உங்களுடைய இந்த பொறுப்பற்ற செலவு பழக்கத்தைத் தூண்டும் நபர்கள் அல்லது சூழ்நிலைகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இவற்றிற்கு ‘இல்லை’ என்று சொல்வதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை.
கும்பம் ராசிபலன்
புறங்கூறும் நபர்கள் கூறுவதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று உங்களுக்குளே சொல்லிக் கொள்ளுங்கள். உங்களது அகங்காரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் தவறுகளுக்கு மன்னிப்பு கேளுங்கள். பணம் அல்லது பொருள் தேடும் எண்ணம் போன்றவற்றை தவிர்த்து மகிழ்ச்சியையும், அமைதியையும் தேட முயற்சி செய்யுங்கள். இன்றைக்கு உங்களது அன்புக்குரியவர்களுக்கு கொஞ்சம் அன்பைக் காட்டுங்கள். உங்களை வலுவிழக்கவும், உங்கள் கவனத்தை சிதறச்செய்யும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நீங்கள் அதிக கவனம் செலுத்தவேண்டும். இது கசப்பான உறவுகள், சுயநலமிக்க நண்பர்கள் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளால் கூட இருக்கலாம்.
மீனம் ராசிபலன்
பலவிதமான பணிகள் உங்களது அர்ப்பணிப்புகளைத் தடுத்து நிறுத்துகின்றன. அவற்றிலிருந்து நீங்கள் விடுபட வேண்டிய நேரம் இதுவாகும். சிறிது நேரம் தியானம் செய்து, உங்கள் உண்மையானதேவையைப்புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பொருளாதார நிலை குறித்து அதிகம் கவலைப்படாதீர்கள். இருந்தாலும், பொருளாதார நிலை குறித்து கொஞ்சம் கவனமாக இருங்கள். நல்ல நேரம் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள், மற்றவிஷயங்களைத்தவிர்த்து விடுங்கள். உங்களது நல்ல மற்றும் கெட்ட சந்தர்பங்களில், உங்களுடன் இருப்பவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்.













0 Comments