இன்றைய ராசிபலன் 03-01-2023
மேஷம் ராசிபலன்
பல விஷயங்கள் உங்களைப் பாதிக்கலாம். உங்கள் உணர்ச்சிகள் எல்லா இடங்களிலும் வெளிப்படலாம். மேலும், வாழ்க்கையைச் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இதுவாகும். நீங்கள் தேர்வு செய்தவை மற்றும் முடிவெடுத்தவற்றை வெளிக்காட்டச் சிறிதளவில் நேரத்தைச் செலவிடுங்கள். இதன் மூலம், உங்களுக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்த கேள்விகளில் சிலவற்றுக்குப் பதில் கிடைக்கச் பெறுவதுடன், உங்களுக்குத் தேவையான தெளிவுகளைத் தரும். உங்கள் மனதைக் கவலையடையச் செய்யும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை பெறவும். உங்களை விரும்புவாரால் மட்டுமே உங்களுக்காகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியும்.
ரிஷபம் ராசிபலன்
இன்று, உங்களது மனதில் நிறைய விஷயங்கள் நிறைந்துள்ளன. நிறைய விஷயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உங்களது கவனம் உடனடியாக தேவைப்படும் விஷயங்களில், உங்கள் ஆற்றலை மையப்படுத்தத் தெரிவு செய்யுங்கள். இன்று, உங்களது குறும்புத்தனமான செயல்களிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. ஆகவே, இன்று, ஏதாவது ஒன்றை சற்று வேகமாக எடுக்க நீங்கள் ஆசைப்பட்டாலும் கூட, அதை செய்ய வேண்டாம். அனைத்தும் உங்களுக்கு செலவு வைத்துவிடும். அவசரகதியில் வார்த்தைகளை கொட்டித் தீர்ப்பதையும், மனக்கிளர்ச்சியால் எடுக்கும் முடிவுகளையும் தவிருங்கள்.
மிதுனம் ராசிபலன்
எப்போதும் நீங்கள் வேலையைப் பற்றியோ அல்லது விளையாட்டைப் பற்றியோ சிந்திப்பதில்தான் கவனம் செலுத்துகிறீர்கள். ஏதாவது ஒன்றை குறித்து மட்டுமே அதிதீவிரத்துடன் அணுகும் முறை ஆரோக்கியமான நடைமுறை அல்ல. மேலும், நீங்கள் உங்களது தற்போதைய வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதைக் கருத்தில் கொண்டு, அதை இன்னும் சமச்சீரானதாக மாற்ற வேண்டும். இன்றைய சூழலில், நீங்கள் ஏதாவது ஒன்றைப் பற்றிய உங்கள் மாறுபட்டக் கருத்தை கொண்டுள்ள போதோ அல்லது அதுபற்றி சந்தேகிக்கத் தொடங்கும் போதோ, நீங்கள் உங்கள் எண்ணங்களைப் போலவே வலிமையானவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, இன்றைக்கே உடனடியாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. பின்பு, அவற்றிற்காக வருத்தப்படுவதை விட, இப்போதே செய்யுங்கள்.
கடகம் ராசிபலன்
உங்கள் வசீகரமும், நேர்மறை சிந்தனையும் ஒருவரின் நாளை உற்சாகப்படுத்தக்கூடும். மேலும், அது ஒவ்வொரு நாளிலும் மிகச் சிறந்ததைச் செயல்படுத்த அவர்களுக்கு ஒரு புதிய காரணமாக அமையும். எனவே, உங்கள் நேர்மறையான உணர்வினைத் தொடருங்கள். உங்கள் கவர்ச்சியும் நேர்மறையும் ஒருவரின் நாளை உற்சாகப்படுத்தக்கூடும். மேலும், ஒவ்வொரு நாளும் மிகச் சிறந்ததைக் காட்ட அவர்களுக்கு ஒரு புதிய காரணத்தைக் கொடுக்கும். எனவே உங்கள் நேர்மறையான உணர்வைத் தொடருங்கள். இத்தகைய நேரத்தில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபரைக் கவர்ந்திழுக்க முயற்சித்தீர்கள். அதேசமயத்தில், உங்களது நல்ல மற்றும் கஷ்ட காலங்களில் உங்களுடன் துணை நின்ற சில நபர்களை நீங்கள் கவனிக்கவும், மதிக்கவும் தவறிவிட்டீர்கள்.
சிம்மம் ராசிபலன்
கோபம் உங்களை மீறிச்செல்வதை அனுமதிக்காதீர்கள். எப்போதெல்லாம் உங்களது மனநிலையை இழக்கிறீர்களோ, அப்போது, நீங்கள் உங்களது உணர்ச்சிகளின் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். இன்று, நீங்கள் அதை செயல்பாட்டிற்கு கொண்டு வாருங்கள். மற்றவர்கள் உங்களைத் வெறுப்பேற்றும் போது கூட, இன்று உங்களது சமநிலையை இழக்காதீர்கள். நீங்கள் விரும்புகின்ற கவனத்தைப் ஈர்க்க வேண்டி, தன்னிலை தாழ்ந்து நிற்க வேண்டாம். அதற்கு பதிலாக, உங்களுக்கு பயனளிக்கும் விஷயங்களில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். நீங்கள் ஜொலிக்கக்கூடிய துறைகளில் உங்கள் மனதை செலுத்துங்கள்.
கன்னி ராசிபலன்
அன்போடும், சிரிப்போடும், அகமகிழ்வோடும் இருங்கள். ஏனென்றால், இன்று, நட்சத்திரங்கள் உங்களுக்கு எதிர்பாராத ஆச்சரியங்களை அளிக்க இருக்கின்றன. உங்களது பாதையில் சவால்கள் வந்தாலும் கூட, கடினமான சூழ்நிலைகளிலிருந்து நன்மையினைக் காண முடியும். தைரியமான முடிவுகளை எடுப்பதற்காக, உங்களது அன்பிற்குரியவர்கள் உங்களை உற்சாகப்படுத்துவார்கள். உங்கள் பணப்பையினை திறந்து, அதிலுள்ள பணத்தை குறைவான அளவே பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையோடு இருங்கள். இல்லையெனில், நீங்கள் அதை உணரும் முன்பே அது சுருங்கிவிடும்!
துலாம் ராசிபலன்
நீங்கள் செய்துமுடிக்க வேண்டிய பட்டியலில், நிறைய திட்டங்கள் மற்றும் கருத்துருக்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே நேரத்தில் நீங்கள் குழப்பமாகவும், உற்சாகமாகவும் உணர்கிறீர்கள். மனஅழுத்தம் மற்றும் பயம் போன்றவை உங்களுக்கு பிரச்சினைகளை உருவாக்க விடாமல் முயலுங்கள். நீங்கள் ஒரு சிறிய விஷயத்தை செய்தாலும் கூட, நன்றாகச் செய்யுங்கள். இது உங்கள் கவலை மற்றும் மனஅழுத்தத்தை கடந்து செல்ல உதவும். நீங்கள் பங்கேற்க தகுதியற்றவர்களாக இருக்கும் வாய்ப்புகளில், நிபுணர்களின் உதவியைத் கேட்கத் தயங்க வேண்டாம்.
விருச்சிகம் ராசிபலன்
உங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்காக உங்களுக்கு உதவ யாராவது வருவார்கள். அவர்களை சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். உங்கள் உடல்நலம் பாதித்திருக்க வாய்ப்புள்ளது. நீங்கள் அதைக் கவனிக்க வேண்டும். மற்றவர்களிடம் இருந்து உதவி பெறப் பயப்பட வேண்டாம். இந்த உலகில் உள்ள அனைத்து விஷயங்களிலும் நீங்கள் நிபுணர் அல்ல என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். உங்களைப் போலவே பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் கோபப் படுவதைத் தவிருங்கள். நல்ல காரணங்களுக்காக உங்கள் ஆற்றலைப் பயன்படுத்தினால், அந்த ஆற்றல் உங்களை நன்றாக உணரச் செய்யும்.
தனுசு ராசிபலன்
இன்று, உங்களது அன்பிற்குரியவர்களும், அன்பான நண்பர்களும் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டப் போகிறார்கள். அவர்கள் உங்களது பிரச்சினைகளிலிருந்து எதிர்பாராதவிதமான மகிழ்ச்சியைக் அளிக்கப் போகிறார்கள். இன்று, சமூக நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வெளியே செல்லும் சூழல்கள் ஏற்படக்கூடும். மேலும், இது ஓர் நல்ல உறவுப்பிணைப்பை உருவாக்க உதவும். கடந்த சிலநாட்களாக, உங்களது மனஅழுத்தம் நிறைந்த வேலை தொடர்பான எல்லா விஷயங்களிலிருந்து இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமாக நிகழும். இன்று, உங்களைப் நீங்களே நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் எவ்வித வருத்தமும் பட வேண்டாம். சில நேரங்களில், இது உங்களுக்கு தேவைப்படுகிறது. இதை இன்று முயற்சி செய்யுங்கள்!
மகரம் ராசிபலன்
நீங்கள்சிறப்பாகச்செயல்படுகிறீர்கள். உங்கள் அன்பான குணம் நிச்சயமாக உங்கள் உறவுகளுடன் இருந்த கடினமானகாலங்களைக்கடந்து செல்ல உதவியது. இதுபற்றி நீங்கள்அதிகமாகச்சிந்திக்காமல் இருக்க வேண்டும்.உங்களுக்குக்கடுமையானபணிச்சுமை இருந்த காரணத்தால், உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் புறக்கணித்து வருகிறீர்கள். உங்களை மீண்டும் உற்சாகமாகவைத்திருக்கச்சிறிய ஓய்வுஎடுத்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கலாம்.
கும்பம் ராசிபலன்
பல விஷயங்கள் நடத்திருக்கலாம், ஆனாலும், வாழ்க்கையில் முன்னேற வேண்டிய தேவை உங்களுக்கு உள்ளது. உண்மையில் உங்களுடன் இணைந்திருந்த நபர், சில காரணத்திற்காக இனி உங்கள் வாழ்க்கையில் இணைந்திருக்கப் போவதில்லை. சமீப காலமாக உங்களைப் பாதித்து வரும் மன அழுத்தம் உங்கள் உடல் நிலையைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்வதில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். தியானம் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது மிகவும் நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது. இது மன அழுத்தத்திலிருந்து வெளியே வர உங்களுக்கு உதவும்.
மீனம் ராசிபலன்
இன்றைய நாளில், அமைதியான மற்றும் செறிவுமிகுந்த எண்ணங்களால் உங்களது வாழ்க்கை நிறைந்திருக்க வேண்டும். இன்று, உங்களை நீங்களே வழிநடத்துங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்கு உண்மையிலேயே தேவையானவைகள் தான், உங்களது வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வார இறுதியில், உங்களை நீங்களே நன்கு கவனித்துக்கொள்ள திட்டமிடுங்கள். மேலும் முன்னேறுங்கள். வாழ்க்கையில் குற்றஉணர்வின்றி மகிழுங்கள். ஏனென்றால், வெற்றி மற்றும் அதிர்ஷ்டதிற்கான அலைகள் உங்களது வாழ்க்கையில் வந்து கொண்டிருக்கின்றன.
No comments