சென்னையில் இருந்து கோலாம்பூர் செல்ல இருந்த விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை 10.45 மணிக்கு 194 பயணிகளுடன் விமானம் வந்தது. இந்த விமானம் மீண்டும் காலை 11.45 மணிக்கு கோலாம்பூர் புறப்பட்டு செல்ல வேண்டும். அந்த விமானத்தில் 159 பயணிகள் செல்ல இருந்தனர். இதற்காக அவர்கள் காலை 9.30 மணிக்கு முன்னதாகவே சென்னை விமான நிலையத்துக்கு வந்து பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை, குடியுரிமை சோதனை உள்பட அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். எந்திரக்கோளாறு விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்பு விமானத்தின் எந்திரங்களை விமானி சரிபார்த்தார். அப்போது விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. அதே நிலையில் விமானம் பறப்பது ஆபத்து என்று கருதிய விமானி, இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பயணிகள் விமானத்தில் ஏற்றப்படவில்லை.

No comments