விருதுநகரில் தரையில் பாலை கொட்டி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, March 29, 2023

விருதுநகரில் தரையில் பாலை கொட்டி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்



தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் குமராண்டி தலைமையில்  விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், சத்துணவில் குழந்தைகளுக்கு பால், பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும், மாட்டு தீவனங்களுக்கு மானிய விலை வழங்க வேண்டும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் ஆவின் பாலகங்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாலை தரையில் கொட்டியும், தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment