• Breaking News

    திருப்பூண்டி மேற்கு ஊராட்சி சிவன் கோயில் அருகில் உள்ள குளத்தில் இளைஞர் மூழ்கி பலி


    தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார் வயது 30 இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக நாகை மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்து கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி பகுதியில் வசித்து வருகிறார் இவர் தண்ணீர் பந்தலிலிருந்து  திருப்பூண்டி செல்லும் சாலையில்  பரத் அக்வா  ஏர்ரேட்டர்கள் கடை நடத்தி வருகிறார்.  நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை இதனால் உறவினர்கள் அவரை தேடி வந்தனர் இந்த நிலையில் இன்று காலை அவரது  உடல் சிவன் கோயில் அருகாமையில் உள்ள குளத்தில் மிதப்பதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேளாங்கண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் குளத்தில் மிதந்த சட்டத்தை மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து கீழையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முரளி தலைமையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






    No comments