'கூகுல் பே' மூலம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு - MAKKAL NERAM

Breaking

Saturday, March 18, 2023

'கூகுல் பே' மூலம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

 


தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு மாவட்ட அளவிலான கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் செவிலியர்கள் கேட்கும் இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தை பெறுத்தவரையில், 76 செவிலியர்களுக்கு அவர்கள் விரும்பும் இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. இந்த நிலையில், பணிமாற்றம் செய்யவதற்காக பணியில் இருந்து விடுவிக்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இந்த தொகையை சுகாதாரத்துறை அதிகாரிகள் கூகுள் பே மூலம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்தொகையை வழங்காத செவிலியர்களை பணியில் இருந்து விடுவிக்க காலதாமதம் செய்துவந்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் முத்துமணி, மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment