புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அவர்கள் காவல் நிலையங்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.இதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் கடந்த இரண்டு வாரங்களில் சைபர் கிரைம் போலீசார் மூலம் 75 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திந்தா பாண்டே அவர்களால் இன்று (26-05-2023) உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது.சுமார் ஒன்றரை ஆண்டுகளில் சுமார் ரூ.55,50,000 மதிப்புள்ள 275 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அவர்கள் செல்போன் கண்டுபிடிப்பில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை நேரடியாக வரவழைத்து வெகுமதிகள் வழங்கி வெகுவாக பாராட்டினார்கள். மேலும் செல்போன் சம்மந்தமான புகார்களில் துரித நடவடிக்கை மேற்கொண்டு செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் உடனடியாக ஒப்படைக்க காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
Friday, May 26, 2023
Home
Cyber Crime
vandita pandey IPS
புதுக்கோட்டை மாவட்டம்
ரூ.15 லட்சம் மதிப்புள்ள காணாமல் போன செல்போன்கள் மீட்பு.... புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அசத்தல்....
ரூ.15 லட்சம் மதிப்புள்ள காணாமல் போன செல்போன்கள் மீட்பு.... புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அசத்தல்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment