சமூக நலன் தாட்கோ வருவாய்த்துறை தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பாக ஈரோடு மாவட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ஈரோடு மாவட்டம் , சமூக நலன் தாட்கோ வருவாய்த்துறை தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பாக ஈரோடு மாவட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி பல்வேறு துறைகளின் சார்பில் 137பயனாளிகளுக்கு ரூ.58.19 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் ராஜகோபால் சுங்கரா இ.ஆ.ப, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி .வெங்கடாசலம் , மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.கே. சரஸ்வதி , ஈரோடு மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம் , துணை மேயர் வி. செல்வராஜ் , கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி /திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ) மரு. நாரணவ்ரே மனிஷ் சங்கர் ராவ் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா மற்றும் பலர் உள்ளனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments