திமுக அரசுக்கு அடிப்படை நோக்கமே தெரியவில்லை: பிரபல முன்னாள் அமைச்சர் விமர்சனம் - MAKKAL NERAM

Breaking

Thursday, July 13, 2023

திமுக அரசுக்கு அடிப்படை நோக்கமே தெரியவில்லை: பிரபல முன்னாள் அமைச்சர் விமர்சனம்

 


சமீப நாட்களாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ள காரணத்தால், தமிழகத்தில் தக்காளி விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில், தக்காளி விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தது.


அதன்படி, நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை நடைபெற்று வருகிறது. நியாயவிலை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்படும் நிலையில், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், மக்களுக்கு நடமாடும் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்வது தான் சிறப்பாக இருக்கும். அதைவிட்டு விட்டு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வதை திமுக அரசுபெருமையாக கருதுகிறது. திமுக அரசுக்கு அடிப்படை நோக்கமே தெரியவில்லை என விமர்சித்துள்ளார்.

No comments:

Post a Comment