• Breaking News

    40 ஆண்டுகளுக்குப் பிறகு குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவில் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா; தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு


    திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான மயிலாடுதுறை மாவட்டம் திருத்துருத்தி என்னும் குத்தாலம் அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய உக்தவேதிசுவரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. சமயக்குரவர்கள் மூவரால் பாடல் பெற்றதும்,சுந்தரர் தோல் நோய் நீக்கிய தளமாகவும் இந்த தலம் விளங்குகிறது. 



    சுமார் 62 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோவிலின் குடமுழுக்கு விழா கடந்த 2022 ஆண்டு மே மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 40 வருடங்களுக்குப் பிறகு ஆடி கிருத்திகை தெப்ப உற்சவ திருவிழா நடந்தது. முன்னதாக கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று முருகப்பெருமான்  அணிகலன்கள் அணிந்து,பட்டாடை உடுத்தி,வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி கைலாய வாத்தியங்கள்,மேள வாத்தியங்கள் முழங்க கோவிலில் இருந்து புறப்பாடு செய்யப்பட்டு நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து முருகபெருமான் கோவிலின் அமைந்துள்ள திருக்குளத்தில் எழுந்தருளி தெப்பத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



     பின்னர் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    No comments