மாந்தட்டை ராஜகாளியம்மன் கோவில் 7-ம் ஆண்டு பால்குட திருவிழா நடந்தது
மயிலாடுதுறை மாவட்டம் கீழவெளி மாந்தட்டை கிராமத்தில் அருள்மிகு ராஜகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் 7-ம் ஆண்டு பால்குட திருவிழா நடந்தது. முன்னதாக மஞ்சள் ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் தலையில் சுமந்தவாறு பால்குடங்களுடன்,அலங்கார காவடி புறப்பட்டு மேளதாள வாத்தியங்கள்,வான வேடிக்கைகள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள்,பஞ்சாயத்தார்கள், கிராமவாசிகள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மகளிர் சுய உதவி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments