மதுரை டிஎஸ்பி வீட்டில் இறந்து கிடந்த வாலிபர்
மதுரை அருகே காவல்துறை கண்காணிப்பாளர் வீட்டில் இறந்த நிலையில் இளைஞரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பரங்குன்றம் தனக்கன்குளத்தை சேர்ந்தவர் உதய். இவர் குளோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் மேலாக இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு உதய் வீட்டின் மொட்டை மாடியில் தனது நண்பர்களுடன் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அவரை காணாமல் உறவினர்கள், நண்பர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர்.
இதனிடையே அருகில் உள்ள டிஎஸ்பி பிரபு வீட்டில் யாரோ ஒருவர் இறந்து கிடப்பதாக உறவினர்கள், நண்பர்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து அங்கே சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது உதய் என்பது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உதய் உயிரிழந்தது தெரியவந்தது. உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் வீட்டில் இளைஞர் ஒருவரின் உடல் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
No comments