• Breaking News

    தொடர் விடுமுறை காரணமாக விமான டிக்கெட் கட்டணம் உயர்வு

     


    வருகின்ற 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் பஸ்கள், ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படும். கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.



    இந்த நிலையில், சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமான டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து கொச்சி, திருவனந்தபுரம் செல்வதற்கான விமானக் கட்டணம் ரூ.14 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. அதைபோல மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி செல்லும் விமானங்களிலும் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. விமான கட்டணங்கள் உயர்ந்த நிலையிலும், விமான டிக்கெட்டுகள் விற்று தீர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    No comments