• Breaking News

    சாலை வசதி செய்துதரக் கோரி நாகை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை


    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வேதாரண்யம் நகராட்சி உட்பட்ட 19வது வார்டு கஞ்சாண்டி காடு  முதலியார் தோப்பு பகுதியில் வேதாரண்ய ஈஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 20 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர் .


    இவர்கள் சுமாராக 20 மற்றும் 30 ஆண்டுகள் வசித்து வந்த நிலையில் இப்பகுதி குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை தற்போது சில நபர்களால் ஆக்கிரமிப்பு   செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் நபர்கள் தங்களது வீட்டிற்கு செல்ல முடியாமல் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் மேலும் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட சாலை வசதி இல்லாமல் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.


     இதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரிடம் மற்றும்  வட்டாச்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று இப்பகுதி மக்கள் வேதனையை தெரிவிக்கின்றனர்.

    No comments