• Breaking News

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு என்னை ஈர்த்த கலைஞர் என்ற காணொளி காட்சி

     


    நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நடன சபாபதி தலைமை தாங்கினார் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்,இந்த கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்டம் தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக என் பார்வையில் கலைஞர் என்ற காணொளி தொகுப்பின் முதல் காணொளியை வெளியிட்டு அதற்கான இலச்சியையும் வெளியிட்டனர்.

    வழக்கமான காணொளி காட்சியாக இல்லாமல் கலைஞர் திட்டங்களால் பயன்பெற்ற நபர்களை சந்தித்து அவர்கள் அடைந்த பலன் குறித்து காணொளி காட்சியாக எடுத்து வெளியிட்டு வருகிறார்கள் இது இந்த ஆண்டு முழுவதும் நடைபெறும் என்றும் இதற்கான முதல் துவக்க நிகழ்வாக இந்த காணொளி காட்சி வெளியிடப்படுவதாக தகவல் தொழில்நுட்ப அணியினர் தெரிவித்தனர்.


    ஜெ.ஜெயக்குமார் 9942512340

     நாமக்கல் மாவட்டம் 

    No comments