• Breaking News

    ஏவிசி கல்லூரி உடற்கல்வித்துறை கருத்தரங்கு


    மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி உடற்கல்வித்துறை சார்பில் அடிப்படை உடற்பயிற்சிகள் குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

    கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர் நாகராஜன் தலைமை வகித்தார் உடற்கல்வி இயக்குனர் ராஜ்குமார் முன்னிலை வைத்தார் சிறப்பு விருந்தினராக தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் ஏ. வி. முத்துக்குமரன் கலந்து கொண்டு அடிப்படை உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்கள் எவ்வாறு தேக நலனை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் அன்றாடம் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கி பேசினார். இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பொருளியல் துறை பேராசிரியை செல்வி வரவேற்றார்.

    படவிளக்கம்:-

    ஏவிசி கல்லூரி உடற்கல்வித்துறை சார்பில் நடந்த அடிப்படை உடற்பயிற்சிகள் குறித்த கருத்தரங்கில்  தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் ஏ. வி. முத்துக்குமரன் கலந்து கொண்டு பேசினார்.

    No comments