அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரட்டூர் கொண்டையம்பாளையம் பகுதியில் 2கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைத்திட அந்தியூர் எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்


ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட    அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் ,  குப்பாண்டம்பாளையம் ஊராட்சி , கரட்டூர் முதல் நகலூர் ஊராட்சி கொண்டையம்பாளையம் வரை செல்லும் சாலையில் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் மழைக்காலங்களில் பெய்கின்ற மழையினால் ஏற்படும் வெள்ளம் காற்றாட்டு வெல்லமாக சென்று பவானி ஆற்றில் கலக்கும் அவ்வழியே செல்லும்  பொதுமக்கள் தங்களது அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட சாலையை கடந்து செல்ல முடியாத அளவில் காற்றாற்று வெள்ளம் கரைபுரண்டு செல்வதினால் அந்த பகுதியில் உயர்மட்ட பாலம் வேண்டும் என்றும் பள்ளி,  கல்லூரி மாணவ மாணவிகள் ,  பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர்  அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம்  தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நெடுஞ்சாலை துறை அமைச்சரின் உடனடி நடவடிக்கையாக ரூ.2 கோடி மதிப்பீட்டில்  தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உயர்மட்ட பாலம் அமைத்திட உத்தரவு வழங்கபட்டதை தொடர்ந்து.அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர்  அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம்  உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை  அடிக்கல் நாட்டி  துவக்கி வைத்தார்.

உடன் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் சுப்பிரமணியம்,அந்தியூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் துணை  தலைவர் திருமூர்த்தி , நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சதாசிவம், RI ரமேஷ்,  ரவிக்குமார்  திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 .

Post a Comment

0 Comments