மயிலாடுதுறை அருகே பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் சர்க்கரை ஆலையில் இரும்பு பொருட்களை திருடிய இருவர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகே தலைஞாயிறு பகுதியில் என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வந்தது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த ஆலை கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பூட்டி கிடக்கும் ஆலையில் உள்ள இரும்பு பொருட்களை திருடி செல்ல 2 நபர்கள் திட்டமிட்டு உள்ளனர்.இதனிடையே நேற்று முன்தினம் இரவு ஆலையிலிருந்து இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.தொடர்ந்து நேற்று காலை இளநிலை கிளர்க்காக பணியாற்றும் ஐயப்பன் என்பவர் ஆலையில் வந்து பார்த்தபோது இரும்பு பொருட்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தலைஞாயிறு மதகடி பகுதியை சேர்ந்த வீரமணி மற்றும் தெற்கு தெருவை சேர்ந்த சதாசிவம் ஆகிய இருவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments