கணவன் கண்முன்னே மனைவியை கொலை செய்த மர்ம கும்பல்
பெரம்பலூரில் பைக்கில் சென்ற தம்பதியை வழிமறித்து மர்ம நபர்கள் வெட்டியதில் கணவன் கண்முன்னே மனைவி துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரில் ராஜ்குமார் - பிரவீனா தம்பதி பைக்கில் பெரம்பலூர் நெடுஞ்சாலையில் சென்ற போது அவர்களை வழிமறித்த மர்ம கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த பிரவீனா சம்பவ இடத்திலேயே உயிர் இழக்க ராஜ்குமார் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், கொலைக்கான காரணம் மற்றும் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொலை சம்பவங்கள் அதிகரித்து சட்ட ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments