துபாயில் ஐக்கிய அரபு அமீரக துபாய் அல் கிசஸ் பகுதியில் போர்சுன் பிளாசா ஹோட்டலில் சமூக ஊடகங்களில் தகவல் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் ஊடகங்களின் ஒன்றான “வணக்கம் ஹபீபீ” என்ற சமூக வலைதலம் ஊடகத்தின் முதலாம் ஆண்டு விழா அதன் நிறுவனர் இபு தலைமையில் மற்றும் வணக்கம் ஹபீபீ நிர்வாகிகள் முன்னிலையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டதோடு சிறப்பாக நடைபெற்றது.
முதலில் வரவேற்பு உரையை இபு வழங்க, நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக ஆசிக் மற்றும் ஸ்வேதாவை அவர் அறிமுகப்படுத்தினார்.
கடந்த ஆண்டில் வணக்கம் ஹபீபீ-யின் வளர்கிச்சிக்கு உறுதுணையாக இருந்த அணைவருக்கும் சிறப்பு விருந்தனர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக "ஹபிபி ஆஃப் தி இயர் 2023" என்கிற விருத்தினை ஆசிக் ஃபைரோஸ் பெற்றார் என்பது குருப்பிடப்பட்டது.
இநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக TEPA தலைவர் பால் பிரபாகர், கேப்டன் தொலைக்காட்சி வளைகுடா முதன்மை நெறியாளர் Kamalkvl, GP ப்ரோடக்சன் சுமி பிரசாத், கோகுல் பிரசாத், கலாட்டா குடும்பம் ரவி ,கோமதி, M2Y குலோபல் ஷோலியுசன்ஸ் முகமது அலி ஜின்னா, சல்வா குரூப் நிறுவனர் பகவதி ரவி, ஆர்ஜே அஞ்சனா, , தினகுரல் தமிழ் தேசியநாளிதழ் வளைகுடா நிருபர் நஜீம் மரிக்கா, அமீரக பாடகி மிருதுளா, வணக்கம் பாரதம் வாரஇதழ் போட்டோ கிராபர் சின்னா, , A2B ராஜு மந்திரி,இளம் டைரக்டர் ஆண்ட்ரியா, கல்ஃப் புல்ஸ், கல்ஃப் கட்ஸ், துபாய் புல்லிங்கோ மற்றும் துபாய் தர்பார்-யின் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிசு அளித்து கௌரவிக்கப்பட்டது மேலும் நிகச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் விருந்து உபசரித்து நிறுவனர் இபு நன்றிகளை தெரிவித்தார்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 .
No comments:
Post a Comment