புயல் சின்னம் எதிரொலி: புதுக்கோட்டை மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல தடை
புயல் சின்னம் காரணமாக புதுகை மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது . சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் சனிக்கிழமையன்று சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், தங்களது மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திட வேண்டும் எனவும் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments