கனமழையில் வீடு இடிந்து விழுந்ததை அறிந்த அந்தியூர் எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண தொகை வழங்கினார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி டி.என்.பாளையம் ஒன்றியம் , கணக்கம்பாளையம் ஊராட்சி சின்ன காளியூர் பழைய காலனி பகுதியில் வசிக்கும் பார்வதிதேவி வீடு கனமழை காரணமாக இடிந்து விழுந்ததை அறிந்து அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண தொகையினை வழங்கினர்.
மேலும் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நாங்கள் வசித்து வரும் தொகுப்பு வீடுகள் சிதளம் அடைந்து காணப்படுகிறது எந்த நேரத்திலும் எழுந்து விழும் நிலைமையில் உள்ளது எங்களுக்கு புதிய வீடுகள் கட்டிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.உடன் டி.என். ஒன்றிய கழக செயலாளர் சிவபாலன் , கணக்கம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஸ்வநாதன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திருமுருகன், சம்பத், குமரேசன், வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments