ஐஸ்லாந்தில் வெடிக்கப்போகும் எரிமலை.... ஊரை காலி செய்த மக்கள்..... - MAKKAL NERAM

Breaking

Sunday, November 12, 2023

ஐஸ்லாந்தில் வெடிக்கப்போகும் எரிமலை.... ஊரை காலி செய்த மக்கள்.....

 




ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடிப்பு நிகழ உள்ள நிலையில் 14 மணி நேரத்தில் 800-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் தோன்றியுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ஆர்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ள ஐஸ்லாந்து நாட்டில், எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைநகர் ரெய்க்ஜவிக் அருகே உள்ள கிரண்டவிக் நகரின் அருகில் எரிமலை ஒன்று வெடித்து சிதற உள்ளதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதன் காரணமாக கிரண்டவிக் நகரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.


நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள இந்த நகரம் பிரபல சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இப்பகுதியில அதிக அளவில் வெந்நீர் ஊற்றுகள் இருப்பதால் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் எரிமலை வெடிப்பு காரணமாக கடந்த 14 மணி நேரத்தில் மட்டும் சுமார் 800-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் தோன்றியுள்ளதாக அந்நாட்டு நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, கிரண்டவிக் நகரை மொத்தமாக காலி செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.


நகரில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ள அதிகாரிகள், எரிமலை வெடிப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எரிமலை குழம்பு மற்றும் சாம்பல் காரணமாக கிரண்டவிக் நகரம் கடுமையான சேதத்தை எதிர்கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment