ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கு...... தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் மகனுடன் கைது...... - MAKKAL NERAM

Breaking

Sunday, December 31, 2023

ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கு...... தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் மகனுடன் கைது......

 


படாளம் அடுத்த புக்கத்துறை பகுதியில் இருந்து, உத்திரமேரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், இம்மாதம் 21 ம் தேதி அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கிடந்தது.  அது குறித்த தகவலையடுத்து அங்கு சென்ற படாளம் போலீஸார்  உடல், முகம், தலை உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் கிடந்து அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி  வைத்து விசாரணை நடத்தினர். 


அவர்களின்  விசாரணையில் உயிரிழந்தவர் வண்டலூர் அடுத்த கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமார் என்று அடையாளம் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.



போலீஸாரின் தீவிர விசாரணையில் தாம்பரம் மாநகராட்சி 45 வது வார்டு திமுக கவுன்சிலர் தாமோதரன் என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 


அதையடுத்து நேற்று இரவு கவுன்சிலர் தாமோதரன் வீட்டுக்குச்சென்ற படாளம் போலீஸார் அவரையும், கொலை வழக்கில் தொடர்புடைய அவரது மகனையும் கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். அடையாளம் தெரியாத கொலை சம்பவம் நடைபெற்று பத்து  நாட்களுக்குள் புலன் விசாரணை செய்து, குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிந்து கைது செய்துள்ள போலீஸாரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment