• Breaking News

    கல் குவாரியில் இறந்துகிடந்த வாலிபர்..... இருவர் கைது.....

     


    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒசஹள்ளி கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான கைவிடப்பட்ட கல் குவாரி உள்ளது. கடந்த 6-ம் தேதி இந்த குவாரியில் உள்ள 30 அடி ஆழப்பள்ளத்தில் முத்துராயன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த முத்து மணி (22) என்பவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தேன்கனிக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.



    தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீஸார், கல்குவாரி பள்ளத்தில் இறந்துகிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிகோட்டை அரசு மருந்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் கடந்த 5-ம் தேதி இரவு முத்துமணியுடன் அவரது உறவினர்கள் இருவர் மது அருந்த சென்றது தெரியவந்தது.


    இதையடுத்து, சரவணன், முத்துக்குமார் என்ற அந்த இரண்டு இளைஞர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.



    அதில், முத்துராயன் கொட்டாயை சேர்ந்தவர் கருப்பன். இவரது உறவுக்கார பெண் ஒருவருடன், முத்துமணி தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதைக்கேள்விப்பட்ட கருப்பன் முத்துமணியை பலமுறை நேரில் கண்டித்துள்ளார். ஆனால், அதனை காதிலேயே போட்டுக்கொள்ளாத முத்துமணி, தொடர்ந்து அந்த பெண்ணுடனான உறவைத் தொடர்ந்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கருப்பன் அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.



    இதற்காக முத்துமணிக்கு உறவான சரவணன், முத்துக்குமார் ஆகியோரது உதவியை நாடியுள்ளார். சம்பவத்தன்று இரவு இருவரும் முத்துமணியை மது அருந்த அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு போதை தலைக்கு ஏறியதும் கருப்பனுடன் சேர்ந்து முத்துமணியை அடித்து கொலை செய்தனர். இதைத்தொடர்ந்து, சரவணன், முத்துக்குமார் ஆகிய இருவரை கைது செய்த போலீஸார், தலைமறைவாயிருக்கும் கருப்பனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    No comments