• Breaking News

    மாநில ஹாக்கி போட்டியில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி வரும் நாகை புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்


    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 64வது மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. அதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர் இதையொட்டி, நாகை மாவட்டத்திலிருந்து புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் நாகை மாவட்டத்தின் சார்பில் கலந்து கொண்டு விளையாடினர், இன்று கள்ளக்குறிச்சி ஏ கே டி பள்ளியுடன் மோதிய நாகை புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி, 0-7 என்ற விகிதத்தில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்காக முன்னேறியுள்ளனர்,  நாகை மாவட்டத்தின் சார்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை, திருச்சி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை பாராட்டி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


    நாகை மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி

    No comments