அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு - MAKKAL NERAM

Breaking

Saturday, December 2, 2023

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு



வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 5ம் தேதி முற்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மிக்ஜம் புயல் டிச.5ம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என்றும், தற்பொழுது சென்னையிலிருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்புக் கருதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment