• Breaking News

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பாதையில் உள்ளார் - பிரபல அமெரிக்க பாடகி

     


    பிரபல அமெரிக்க பாடகி மெரி மில்பென். ஆப்பிரிக்க-அமெரிக்கரான இவர் பல்வேறு ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.


    இதனிடையே, கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மெரி மில்பென் இந்திய தேசிய கீதத்தை பாடி கவனம் பெற்றார். அவருக்கு இந்தியாவில் பல ரசிகர்கள் உள்ளனர்.


    இந்நிலையில், பாடகி மெரி மில்பென் பிடிஐ செய்தி முகைமைக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பாதையில் உள்ளார் என்று அவர் கூறினார்.


    மெரி மில்பென் கூறியதாவது:-


    இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவிற்கு பிரதமர் மோடி சிறந்த தலைவராக விளங்குகிறார். பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் மிகப்பெரிய ஆதரவு உள்ளது. மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக வேண்டுமென அமெரிக்காவில் நிறைய பேர் விரும்புகின்றனர் என நான் நம்புகிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பாதையில் உள்ளார். ஏனென்றால், மோடி இந்தியாவின் சிறந்த தலைவராவார்.


    நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஆதரவாளர் என்பது இந்தியாவில் அனைவருக்கும் தெரியும். அதில் எந்த ரகசியமும் இல்லை' என்றார்.

    No comments