குத்தாலம் கம்பர் கழக இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கம்பர் கழக இரண்டாம் ஆண்டு விழா தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு குத்தாலம் கம்பர் கழகத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்,செயலாளர் ஜானகிராமன் தொகுத்து வழங்கினார்,ஆலோசகர் ஜெயராமன் அனைவரையும் வரவேற்றார், பொருளாளர் மோகன் ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை வாசித்தார்,இதில் சிறப்பு விருந்தினராக பாரதி செம்மல் உரையரசி வைஜெயந்தி இராஜன் கலந்துகொண்டு கம்பர் கண்ட ஒருமைப்பாடு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி பேசினார்.
முன்னதாக நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் மீனாட்சி சுந்தரம் புறங்கையால் ஒரு நிமிடத்தில் 100 தண்டால் எடுத்து செய்து காண்பித்தார்,பின்னர் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி அமுதயாழினி பாரதிதாசன் கவிதையை ஒப்புவித்தார், தொடர்ந்து சூரியநாராயணன்,குமார்,கேசவசாமி, இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினர்,இறுதியில் பாண்டியன் நன்றி கூறினார்.
No comments