கட்டிக்குளம் ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகள், ஆர்வமுடன் காளைகளை அடக்கி பரிசுகளை அள்ளி சென்ற மாடுபிடி வீரர்கள் - 800 காளைகள் பங்கேற்பு - MAKKAL NERAM

Breaking

Wednesday, May 22, 2024

கட்டிக்குளம் ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகள், ஆர்வமுடன் காளைகளை அடக்கி பரிசுகளை அள்ளி சென்ற மாடுபிடி வீரர்கள் - 800 காளைகள் பங்கேற்பு


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிக்குளம்  கிராமத்தில்  திருவேட்டை அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது மதுரை ,தேனி, திண்டுக்கல், திருச்சி கோயமுத்தூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 800 காளைகள் போட்டியில் பங்கேற்றன. 400க்கும் மேற்பட்ட பிடி வீரர்கள் போட்டியில் களம் இறங்கினர். போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

வெற்றி பெறும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசு,வெள்ளி காசு, கட்டில், பீரோ ,சைக்கிள், சில்வர் பாத்திரங்கள்,  உள்ளிட்ட பரிசு பொருட்கள் மற்றும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டன.

மூன்று பிரிவுகளாக இறங்கி மாடுபிடி வீரர்கள் சீறி பாய்ந்து வந்த  காளைகளை ஆர்வத்துடன் அடக்கினர். ஏராளமான கிராம மக்கள் வீரர்களை உற்சாகப்படுத்தினர்.காளைகள் முட்டியதில் 50 பேர் காயமடைந்தனர்.சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment