இன்றைய ராசிபலன் 17-06-2024
மேஷம் ராசிபலன்
இன்று உங்கள் மனதில் நிறைய விஷயங்களைச் சிந்தித்து வருகிறீர்கள், ஆனால் அந்த விஷயங்களை விரைவாகச் சிந்திக்க வேண்டாம். உங்களிடம் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் திறமை இன்று உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களைச் சுற்றியுள்ள நல்லெண்ணம் கொண்ட நபர்களால் கவரப்படுவீர்கள். உங்கள் மனதை வலுவாக வைத்திருங்கள், நீங்கள் கேட்கும் அனைத்தையும் நம்ப வேண்டாம். சிக்கலான விஷயங்களை மட்டும் நிராகரிக்க வேண்டாம். ஒரு நேரத்தில் ஒரே ஒரு சிக்கலுக்கு மட்டும் தீர்வு காணுங்கள்.
ரிஷபம் ராசிபலன்
நீங்களும் உங்கள் கூட்டாளிகளும் சமீப காலமாகநிறையச்சச்சரவுகளைச் சந்தித்து வருகிறீர்கள். அவர்களுடனானசச்சரவுகளைக்களைய ஒரு வழியைக் கண்டுபிடிக்க நேரம் இதுவாகும். அதனை இனி நீங்கள் புறக்கணிக்க முடியாது. கடந்த கால தவறுகளைப் பற்றி நீங்களே வருத்தப்படுவது தவறான நடவடிக்கை. நீண்ட காலமுன்னேற்றத்திற்குத்தேவையான நடவடிக்கைகளைத் தேர்வு செய்து, அதற்கு ஏற்ற வகையில் சிந்தியுங்கள். இன்று உங்களுக்கு வீட்டிலும், வேலைகளிலும் உள்ள விஷயங்கள் நல்ல முறையில் நடக்கும்.
மிதுனம் ராசிபலன்
இன்று, உங்களின் உள்ளுணர்வுகள் உங்களுக்கு சரியானதைக் காண்பிப்பதாக தோன்றுகிறது. எனவே, அவை உங்களுக்கு வழிகாட்டட்டும். இது உங்களுக்கு சில விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருக்கும். நீங்கள் அதை கவனமாக கவனிக்க வேண்டும். உங்களது பயமானது சில புதிய விஷயங்களை முயற்சிப்பதிலிருந்து உங்களைத் தடுக்கிறது. கடினமான மற்றும் சிக்கலான சூழ்நிலையினை சந்திக்க நீங்கள் தயங்குகிறீர்கள். அதையே ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில், நீங்கள் அதனுடைய பலன்களைப் பெறுவீர்கள்.
கடகம் ராசிபலன்
உங்களது வேலைப்பளு உங்களை சோர்வானவராகவும், மிகவும் மந்தமானவராகவும் ஆக்கிவிடுகின்றது. இச்சூழலில், நீங்கள் உங்கள் கால்களை சற்றே நீட்டி ஆசுவாசப்படுத்தலாம். ஒரு சிறு நடைபயிற்சியை மேற்கொண்டு, புத்துணர்ச்சியான காற்றைப் சுவாசியுங்கள். இது உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைத் தரும். உங்களது அனுதாபம், உணர்ச்சிபூர்வமான ஆதரவு மற்றும் ஊக்கம் போன்றவற்றை உங்களுக்காகவே எப்போதும் இருக்கும் ஒருவருக்கு அளித்து உதவுங்கள். இவ்வாறாக, உங்களது இரக்கத்தின் மாண்பை மறக்கும் மனிதர்கள் அவர்கள் அல்லர். மாறாக, நீங்கள் அவர்களுக்காக செய்த உதவியினை அவர்கள் உண்மையிலேயே பெரிதும் பாராட்டுவார்கள்.
சிம்மம் ராசிபலன்
சமீபத்தில், அனைத்துவிதமான மன அழுத்தங்களும், பதட்டமும் சேர்ந்து உங்கள் உடல்நலத்தை மிகவும் பாதித்துள்ளது. நீங்கள் ஒவ்வாமை அல்லது நாட்பட்ட நோயினை எதிர்த்துப் போராடுபவராக இருந்தால், வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய முடிவுசெய்ய இது சரியான தருணமாகும். நேர்மறையானவற்றை சொல்வதற்கு இயலாத நபர்களிடமிருந்து விலகியே இருங்கள். உங்களைச் சுற்றிலுமுள்ள நபர்கள் உங்களது மனதிற்கு எதிர்மறையானவற்றையே அளித்துள்ளனர். இன்று, ஆகச்சிறந்த முடிவுகளை எடுக்கும் முன்பு, உங்கள் உள்ளுணர்வுகளை முன்பை விட தற்போது அதிகம் நம்ப வேண்டும்.
கன்னி ராசிபலன்
இன்று உங்களுக்கு சில இனிமையான நினைவுகள் ஏற்படலாம். இந்த தருணங்களை அனுபவிப்பதற்கும், உங்கள் வாழ்க்கையில் அன்பானவர்களைப் பாராட்டுவதற்கும் இந்த நாள் சரியானதாக இருக்கும். நீங்கள் சில காலமாக உங்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணித்து வருகிறீர்கள். உங்களுக்கு அதிக வேலை இருப்பதால், ஆரோக்கியத்தைப் புறக்கணித்து வருவதாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அறிவுப்பூர்வமான உரையாடல்களில் ஈடுபடுங்கள் அல்லது சில புதுமையான சோதனைகள் மூலம் உங்கள் படைப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
துலாம் ராசிபலன்
கெட்ட நண்பர்கள் உங்களுக்கு அதிக கஷ்டத்தைக் கொடுக்கலாம். உங்கள் வாழ்க்கையிலிருந்து தவறானவிஷயங்களைக்களைந்து விட வேண்டிய நேரம் இது. உங்கள் லட்சியத்தை அடைய வேண்டும். நீங்கள் எதிர்கொள்ளும் தடைகளைப்பற்றிக்கவலைப்பட வேண்டாம். குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார்கள். சமூகக் கூட்டம் மற்றும் வெளியில் பங்கேற்பதன் மூலம் நீங்கள் பயனடையலாம். சரியானதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் வேலையில், உங்களுக்குள்ளவிருப்பங்களைஆய்வு செய்யுங்கள். உங்கள் பணியில் ஒரு வரையறுக்கப்பட்ட பாதையை உருவாக்கவும்.
விருச்சிகம் ராசிபலன்
நீங்கள் கனவு கண்ட வழியில், எழுந்து உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்! வேலை செய்து உங்கள் வாழ்க்கையைப் பிரகாசமாக்க வேறு யாருடைய உழைப்பாவது உங்களுக்குத் தேவையா? இல்லை. இது நீங்கள் தான்- உங்கள் பங்கை உங்களை விட யார் சிறப்பாகச் செய்ய முடியும்! உங்கள் உறவு ஒரு கடினமான இணைப்பு என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இதுபற்றி உங்கள் மனது பேச வேண்டிய நேரம் இது. உங்கள் ஆணவத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு குழந்தையைப் போலச் சிந்தியுங்கள். நீங்கள் ஒரு தவறான ஆட்டத்தை விளையாடியுள்ளீர்களா? என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
தனுசு ராசிபலன்
நீங்கள் பேசும் வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருங்கள், கடுமையான வார்த்தைகளைப் பேசுவது எந்தவொரு சூழ்நிலையையும் மோசமானதாக மாற்றி விடும். இதனால் உங்களுக்குத் தாங்கிக் கொள்ள முடியாத மன அழுத்தமும், கட்டுப்படுத்த முடியாத கோபமும் உண்டாக்கும். இந்த நாளில் சிறிய ஓய்வு எடுத்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும். இந்த ஓய்வு உங்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுப்பதுடன், உங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்யும். மிகுந்த கட்டுப்பாடு கொண்டவராக இருக்க வேண்டாம், உங்களிடம் உள்ள சில பொறுப்புகளை விட்டுவிட முடிவு செய்யுங்கள்.
மகரம் ராசிபலன்
வெளியே சென்று, நிறைய கற்றுக்கொள்ளுங்கள். இன்று, அதைத்தான் நீங்கள் செய்யவேண்டும். மழுங்கலான திறன்களைக் கூர்மைப்படுத்துங்கள். மேலும், நீங்கள் விரும்புகின்ற அல்லது சிறந்து விளங்குகின்ற ஒரு திறனை, ஆகச்சிறந்ததாக மாற்ற முயற்சி செய்யுங்கள். மன உறுதியோடு இணைந்த ஆர்வமானது, உங்களுக்கு நல்ல தொடக்கத்தைத் தரும். கற்றுக்கொள்வதற்கான நிறைய வாய்ப்புகள் உங்கள் வழியில் வருகின்றன. உங்களைப் பயன்படுத்திக்கொள்ள காத்திருக்கும் நபர்களிடத்தில் எச்சரிக்கையாக இருங்கள். அத்தகைய நபர்களிடமிருந்து விலகி இருப்பதற்காக, உங்களது உள்ளுணர்வு மற்றும் மனதின் தீர்ப்பைப் உபயோகியுங்கள்.
கும்பம் ராசிபலன்
பல்வேறு விஷயங்களில் மக்கள் ஆலோசனை பெறுவார்கள். இது சில அற்புதமான நட்புகளை உருவாக்க உதவும். உங்கள் முன்னுரிமைகளை மறுசீரமைப்பதன் மூலம் இன்றைய நாளை உலகின் சிறந்த நாளாக மாற்ற உங்களால் முடியும். சில விஷயங்களை அதிகமாகச் செய்வதைத் தவிர்க்கவும். இப்போது நீங்கள் எதிர்கொள்ளும் இடையூறுகள் உங்களைப் பலப்படுத்தும். இரட்டை ஆசீர்வாதங்கள் விரைவில் உங்களை வந்தடையும்.
மீனம் ராசிபலன்
இன்று, நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பீர்கள். இது உங்களுக்கு புதிய சிந்தனைகளையும், நுண்ணறிவு திறத்தினையும் தரும். அவற்றை இழக்காதீர்கள்! உங்களது திறமைகளை பட்டைதீட்டக்கூடிய கற்றல் வாய்ப்புகளுக்காக நீங்கள் இன்னும் தயாராக இருப்பீர்கள். இன்று, சில குறுகியகால பயணங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. அற்பத்தனமான விஷயங்களில் கவனம் செலுத்தும் மனப்போக்கு உங்களிடத்தில் உள்ளது. எனவே, முக்கியமான விஷயங்களில் கவனத்தை செலுத்துங்கள். ஏனெனில், இது உங்களுக்கு ஒரு வளமான அனுபவமாக இருக்கும்.
No comments