• Breaking News

    விக்கிரவாண்டி இடைத் தேர்தல் அதிமுக புறக்கணிப்பு..... தோல்வி பயத்தில் எடப்பாடி..... தொண்டர்கள் அதிருப்தி

     

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ-வாக இருந்த நா.புகழேந்தி உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட இத்தொகுதியில் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தொகுதியில் நேற்று துவங்கி, வரும் ஜூன் 21ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    இத்தொகுதியில் திமுக கூட்டணியில் திமுக சார்பில் அக்கட்சியின் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்ததை குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் விக்கிவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் 3 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

    அதில், “சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ள திமுக ஆட்சியில் வரும் 10-7-2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப் பேரவை இடைத்தேர்தலை அதிமுக புறக்கணக்கிறது" என குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பை குறிப்பிட்டு, தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்துள்ளதாக திமுக நிர்வாகிகள் பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். எதிர்கட்சியாக இருந்துகொண்டு இடைத்தேர்தலை புறக்கணிப்பதா என அதிமுக தொண்டர்கள் தலைமையின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

    No comments