• Breaking News

    விராட் கோலியின் மாபெரும் உலக சாதனையை சமன் செய்தார் சூர்யகுமார் யாதவ்

     

    டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சூர்யகுமார் யாதவின் அதிரடி அரைசதத்தின் மூலம் 181 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியால் வெறும் 134 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன்மூலம் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

    இந்தியாவின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருது பெறுவது இது 15-வது முறையாகும். இதன் மூலம் டி20 போட்டிகளின் வரலாற்றில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர் என்ற விராட் கோலியின் உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.


    அந்த பட்டியல்:-


    1. விராட் கோலி / சூர்யகுமார் யாதவ் - 15 முறை


    2. விரந்தீப் சிங்/ சிக்கந்தர் ராசா/ முகமது நபி - 14 முறை

    No comments