சோழவரம் ஒன்றியத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தினி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஊழியர்களிடையே உறுதிமொழி ஏற்பில் ரத்தத்தின் தேவையை கருத்தில் கொண்டு தன்னார்வ ரத்த தானம் செய்வதின் அவசியம் குறித்து எனது குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் உறவினர்கள் சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது இனம் மதம் பாகுபாடின்றி இரத்ததானம் செய்வேன் எந்த உயிர் இழப்பும் ஏற்படாது.தன்னார்வமாக இரத்த தானம் செய்வேன் என உறுதி அளிக்கிறேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது இதில் துணை வட்டார வளர்ச்சிய அலுவலர் சுபதாஸ் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments