கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு இரவு நேர பணிக்கு மருத்துவரை நியமித்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்த பாஜகவினர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு துறை சார்பாக கொடுக்கப்பட்ட புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் குறைகளை தீர்க்கும் வகையில் மருத்துவர்களை நியமனம் செய்த மாவட்ட ஆட்சியாளர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பாகவும் பாரதிய ஜனதா கட்சியின் அரச தொடர்பு துறை பிரிவின் சார்பாகவும் நன்றி தெரிவித்தனர்.
பின்னர் மருத்துவமனைக்கு சென்றுசெந்தில்குமார் கிழக்கு மாவட்ட தலைவர் மற்றும் சந்திரசேகர் அரசு தொடர்பு துறை பிரிவு மாவட்ட செயலாளர் நரேஷ் குமார் உள்ளிட்ட கட்சியினர் நோயாளிகளின் பல்வேறு குறைகளை கேட்டறிந்தனர்.
No comments