புதுப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் மின்அழுத்த குறைபாட்டினை போக்கும் வகையில் 100கேவிதிறன் கொண்ட புதியமின்மாற்றியை அமைத்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆறுமுகத்திற்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள் - MAKKAL NERAM

Breaking

Wednesday, July 17, 2024

புதுப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் மின்அழுத்த குறைபாட்டினை போக்கும் வகையில் 100கேவிதிறன் கொண்ட புதியமின்மாற்றியை அமைத்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆறுமுகத்திற்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் உள்ள 08வது வார்டு கவரைத்தெரு அருகே புதுப்பாக்கம் பிரதானசாலையையொட்டி 100கேவி திறன் கொண்ட புதியமின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது .

இந்நிகழ்ச்சிக்கு புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் லலிதாகிரிபாபு முன்னிலை வகித்தார் . மாம்பாக்கம் துணை மின் நிலைய ஆக்கமுகவர் அனைவரையும் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக புதுப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவரும் புதுப்பாக்கம் எம்.ஆறுமுகம் கலந்துகொண்டு புதியமின்மாற்றியின் செயல்பாட்டினை துவங்கிவைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

 இந்நிகழ்வில் செங்கல்பட்டு மின்வாரிய தலைமை பொறியாளர் அருணாச்சலம் , மறைமலைநகர் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம்  புதுப்பாக்கம், சிறுசேரி ஒன்றியக்குழு உறுப்பினர் ஆதிலட்சுமிகண்ணபிரான் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் , பொதுமக்கள் மின்சாரவாரிய ஊழியர்கள் எனதிரளாக கலந்துகொண்டனர்கள். இதுகுறித்து துணைத்தலைவர் லலிதாகிரிபாபு கூறுகையில் எனது இந்த 08வதுவார்டில் உள்ள கன்னியம்மன் கோவில் தெரு , காமராஜர் தெரு ,கவரைத்தெரு உள்ளிட்டபகுதிகளுக்கு கடந்த பத்துஆண்டுகளாக ஓரேஓருடிரான்ஸ்பார்மர் மட்டும் உபயோகத்தில் இருந்துவந்ததால் இந்தபகுதிகளில் அடிக்கடி குறைந்தமின்அழுத்தம் ஏற்பட்டுவந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவந்தனர்கள்.

 இதனை எங்கள் தலைவரிடம் நான் சென்று  புதியமின்டிாரன்ஸ்பார்மர் தனியாக அமைக்கவேண்டும் என்று இப்பகுதி மக்கள் சார்பில்  கோரிக்கைவைத்தேன் அதனடிப்படையில் அதற்கான வேலைகள் நடைப்பெற்று புதியடிரான்ஸ்பார் அமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன்மூலம் நீண்டஆண்டுகால பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே உடனடியாக செயல்படுத்திய தலைவர் அவர்களுக்கும் உறுதுணையாக இருந்த மின்சாரநிர்வாகத்திற்கும் எங்கள் வார்டு பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஊராட்சி மன்றம் சார்பில் தலைவர் எம்.ஆறுமுகம் அனைவரையும் ஒருங்கிணைத்து செய்திருந்தார் .

No comments:

Post a Comment