• Breaking News

    குத்தாலம் இராஜகாளியம்மன் ஆலய 20 ஆம் ஆண்டு திருநடன உற்சவம்..... ஏராளமான பக்தர்கள் வீடுகள் தோறும் மாவிளக்கு தீபம் இட்டும் பக்தர்கள் வழிபாடு.....


    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சின்ன செங்குந்தர் வீதியில்  இராஜகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் 20-ம் ஆண்டு திருநடன உற்சவ திருவிழா கடந்த 10-ம் தேதி இரவு காப்புக் கட்டுதளுடன் தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் நிகழ்வான திருநடன உற்சவமனது கடந்த புதன்கிழமையிலிருந்து நடைபெற்று வருகிறது.

    ஆறாவது நாளான நேற்று பக்தர்கள் பட்டு சேலை பழங்கள் உள்ளிட்ட சீர் வரிசைகளை எடுத்து வந்தனர் பின்னர் பாலதண்டாயுதபாணி திருக்கோயில் இருந்து புறப்பட்டு கோவில் முன்பாக இராஜகாளியம்மன் பாம்பாட்டம்,கும்மியாட்டம்,மகுடியாட்டம், உள்ளிட்ட  திருநடன உற்சவம் நடைபெற்றது அதனை தொடர்ந்து வீடுகள் தோறும் பக்தர்கள் குத்துவிளக்கு ஏற்றியும் மாவிளக்கு தீபம் இட்டும் தீபாராதனை எடுத்தும் வழிபட்டனர் இந்த திருநடன உற்சவமனது வருகிற வியாழக்கிழமை வரை நடைபெறும் என்பது குறிப்பிட்டுத்தக்கது.

    No comments