• Breaking News

    தேனி: கம்பத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு.... எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.....


    தேனி மாவட்டம் கம்பத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது நாராயண தேவன் பட்டி, குள்ளப்ப கவுண்டன்பட்டி, கரு நாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களை கொண்டது கம்பம் ஊராட்சி ஒன்றியம்,இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் மிகவும் பழமையாக இருந்த காரணத்தினால் கடந்த ஓராண்டுகளுக்கு முன்பாக புதிதாக கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது ரூபாய் 3 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு வழி வகுக்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது.

    கட்டிடப் பணிகள் முடிவடைந்து இன்றைய தினம் இதற்கான திறப்பு விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தமிழக முதல்வர் இன்று காணொளி காட்சி மூலமாக இந்த கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

    இதற்காக திறப்பு விழா நிகழ்ச்சி கம்பம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்  ஆர்வி சஜீவனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலமாக இந்த கட்டிடத்தினை திறந்து வைத்ததை அடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குத்துவிளக்கேற்றி எம் எல் ஏக்கள் கலந்து கொண்டனர் .

    மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் அரசு துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    No comments