கல்லூரிக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றிய மகன்..... பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை..... - MAKKAL NERAM

Breaking

Tuesday, July 16, 2024

கல்லூரிக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றிய மகன்..... பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை.....

 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் முஸ்லிம் நகர் பகுதியில் வசித்து வரும் அக்மல் என்ற 20 வயது இளைஞர் திருத்தணி அரசு கலை கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் கல்லூரிக்கு செல்லாமல் தன்னுடைய நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்ததால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்து அவர் அதே பகுதியில் உள்ள மாந்தோப்பில் விவசாய நிலங்களுக்கு அடிக்கடி பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி உள்ளார். இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கல்லூரிக்கு செல்லாமல் சுற்றியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment