• Breaking News

    பெரம்பலூர் அருகே சர்க்கரை ஆலை நிர்வாகியை கண்டித்து சர்க்கரை ஆலை முன்பு பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்


    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் கிராமம், பெரம்பலூர் சர்க்கரை ஆலை முன்பு பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் சார்பில், சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமையில், BMS ( பாரதிய மஸ்தூர் சங்கம்)மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வழங்கப்பட்ட சங்க கடிதத்தினை வாங்க மறுக்கப்பட்டு நிர்வாகிகளை அவமதித்து வெளியேற்றிய தலைமை நிர்வாகி கே.ரமேஷ் - யை  கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

    இதில் தினக்கூலி தொழிலாளர்களை நியமனம் செய்வது ஊதிய நிர்ணயம் செய்வது போன்றவற்றில் பாரபட்சத்துடன், செயல்பட்டு தனக்கு வேண்டிய நபர்களிடம் பரிந்துறையின்   அடிப்படையில் முரணாக செயல்படுகிறார்.

    தொழிற்சங்கம் மற்றும் விவசாய சங்கங்களுடன் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்.தனக்கு வேண்டப்பட்ட ஊழியர்கள் பணிக்கு வராமலே பணிக்கு வந்ததாக வருகை பதிவு செய்து தலைமை நிர்வாகி ஊதியம் வழங்கி கொண்டிருக்கிறார். 

    மேற்கண்ட இன்னும் பல முரண்பாட்டுடனும் தன்னிச்சையாகவும் செயல்பட்டு வரும் பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி ரமேஷ் - யை  பணியிடம் நீக்கம் செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்து கோஷம் எழுப்பினர்.இந்நிகழ்வில் மநில துணை தலைவர் எஸ்.மணிவேல்,மாவட்ட செயல் தலைவர் சிவம் செந்தில் குமார், மாவட்ட துணை தலைவர் எம்.தமிழரசன், மாவட்ட பொருளாளர் அமுதா கர்ணன் மாவட்ட செயலாளர் ஏ.கே.செந்தில் குமார்  உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    No comments