கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ₹.3.50 லட்சம் மதிப்பிலான 71 பயனாளிகளுக்கு பணி உத்தரவுகளை பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் விழா, சோழவரம் ஒன்றிய பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் கலந்து கொண்டு, கலைஞரின் கனவு இல்ல திட்டம் குறித்து பயனாளிகளிடையே பேசினார்.
பின்னர், சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழிஞ்சிவாக்கம், ஜெகநாதபுரம், ஆமூர், மாதவரம், ஆண்டார்குப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த 71 பயனாளிகளுக்கு இல்லம் ஒன்றுக்கு ₹3.50 மதிப்பீட்டிலான பணி உத்தரவு ஆணைகளை பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் வழங்கினார்.இந்த நிகழ்வில், சோழவரம் ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், சோழவரம் வட்டார ஊராட்சி அலுவலர் சாந்தினி, ஊராட்சி மன்ற தலைவர்கள், சீனிவாசன். விக்ரம்.வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments