• Breaking News

    தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

     

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரத்தால் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு சில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

    அந்த வகையில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதன்படி திருவண்ணாமலை , ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு , விழுப்புரம் ,கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு இடி மின்னலுடன் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    No comments