• Breaking News

    பொன்னேரியில் திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடைபெற்றது


    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்  பொன்னேரியில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சு போட்டி என் உயிரினும் மேலான என்ற தலைப்பில்  நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ  மாணவிகள் கலந்து கொண்டு தந்தை பெரியார், பேரறிஞர்அண்ணா ,முத்தமிழ் அறிஞர் கலைஞர் ,தளபதி மு க ஸ்டாலின் ஆகியோரை பற்றி பத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் மாணவர்கள் உரையாற்றினர்.

    இதற்கு நடுவர்களாக வழக்கறிஞர் அருள்மொழி, தமிழ் காமராசன், நாகை நாகராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்தனர் இதில் முதல் பரிசாக சாத்ராக் இரண்டாவது பரிசு ராஜராஜேஸ்வரி மூன்றாவது பரிசாக முத்துகுமரன் ஆகியோர் வெற்றி பெற்றனர் இவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கழக செயலாளர் டி ஜெ.கோவிந்தராஜன், மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் அப்துல் மாலிக், பிரபு கஜேந்திரன், ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்  இதில் வெற்றி பெற்றவர்கள் மண்டல அளவிலான நடைபெறும் போட்டியில் கலந்துக்கொள்ள உள்ளனர் .

     இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் செய்து இருந்தார் , பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார் நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமாண விஸ்வநாதன் , இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மோகன் பாபு, முரளிதரன் ,சங்கர், யுவராஜ், கதிரவன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட அவைத் தலைவர் பகலவன் ,மாநில தகவல் தொடர்புத்துறை துணை செயலாளர் சி.எச்.சேகர் ,எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் ஜெ.மூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் ,நிர்வாகிகள் அன்புவாணன், கதிரவன், கன்னிகை பேர் ஸ்டாலின் ,பா.செ. குணசேகரன் ,வெங்கடாசலபதி ஒன்றிய செயலாளர் வள்ளூர் ரமேஷ் ராஜ் ,சோழவரம் செல்வ சேகரன், சக்திவேல் ஆசான புதூர் சம்பத்குமார் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியின் முடிவில் பொன்னேரி நகர இளைஞரணி அமைப்பாளர் தீபன் நன்றி கூறினார் .அமைப்பாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    No comments