பாஜகவில் இணைந்து ஆறு மாதமாகியும் பதவி கொடுக்கவில்லை - விஜயதரணி - MAKKAL NERAM

Breaking

Tuesday, August 27, 2024

பாஜகவில் இணைந்து ஆறு மாதமாகியும் பதவி கொடுக்கவில்லை - விஜயதரணி

 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஓ.எம்.சி.ஏ மைதானத்தில் தமிழகம் மீட்போம் தளராது உழைப்போம் என்ற தலைப்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் பாஜக பிரமுகர் விஜயதரணி பேசியதாவது, மூன்று முறை நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இரண்டரை ஆண்டு காலம் பதவியிருந்தும் இருக்கின்ற பதவியையும் விட்டுவிட்டு பாஜகவில் இணைந்துள்ளேன். அதற்காக எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் வரவில்லை. எதிர்பார்ப்போடு தான் வந்திருக்கிறேன். காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து ஆறு மாதமாகியும் பதவி கொடுக்கவில்லை.

எனக்கு நல்லது பண்ணுவீங்க என தெரியும். பாஜக என்னை போன்றவர்களை நிச்சயம் பயன்படுத்தும். என்ன அண்ணே சரிதானே? என விஜய்தரணி அண்ணாமலையை பார்த்து கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இது மட்டுமில்லாமல் தனியாக தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த விஜயதரணி நடிகர் விஜய் ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு கேட்டுள்ளார். உங்கள் செல்வாக்கு நீங்கள் தனி கட்சியை தொடங்கலாமே என ராகுல் காந்தி யோசனை கூறியதால் தான் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். இதனால் அவர் காங்கிரஸ் கட்சியுடன் இணைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அவர் யாருடன் கூட்டணி அமைத்து யாரை எதிர்க்க போகிறார் என்பதை பொறுத்துதான் அரசியலில் மாற்றங்கள் வரும் என விஜயதரணி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment