முடிச்சூரில் SSR குழுமத்தின் பலவகை வாகன கண்காட்சி அறை திறப்பு விழா..... அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்......
எஸ் எஸ் ஆர் குழுமத்தின், எஸ் எஸ் ஆர் எலக்ட்ரிக் மற்றும் எஸ் எஸ் ஆர் மல்டி பிராண்ட் ஷோரூம்கள் திறப்பு விழா பழைய பெருங்களத்தூர் பாரதி நகர் மற்றும் முடிச்சூர் பகுதியில் நடைபெற்றது. எஸ் எஸ் ஆர் நிறுவனம் ஆர்.கே.கருணாகரன், எஸ் எஸ் ஆர் குழுமத்தின் எஸ் எஸ் ஆர் கே. சாய் சரண்ராஜ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
இதில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா, ஆகியோர் கலந்து கொண்டு ஷோரூம்களை திறந்து வைத்த குத்துவிளக்கு ஏற்றி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தாம்பரம் முடிச்சூர் சாலையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் விக்ரமராஜா ஆகியோர் இலவச ஹெல்மெட்டுகளை வழங்கி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழு தலைவர் படப்பை மனோகரன், ஒன்றிய செயலாளர் ஜி.கே. ரவி, பகுதி செயலாளர்கள் டி.காமராஜ், திருநீர்மலை ஜெயக்குமார், டி ஆர் கோபி, மாமன்ற உறுப்பினர் பி.புகழேந்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள், மிஸ்டர் வேர்ல்டு ராஜேந்திரன் மணி மற்றும் படப்பை பிரகாஷ், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments