• Breaking News

    தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

     


    நாட்டில் வருடத்திற்கு இருமுறை அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வை சமாளிக்கும் விதமாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் 50 சதவீதத்தை ஊழியர்கள் பெற்று வருகிறார்கள். இதைத்தொடர்ந்து சமீபத்தில் மத்திய அரசு அகவிலைப்படியை 3% உயர்த்தி அறிவித்தது. இதைத்தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில் தற்போது தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவித்துள்ளார். அதன்படி 3 சதவீதம் வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இனி 53 சதவீத அகவிலைப்படியை ஊழியர்கள் பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். மேலும் தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

    No comments